Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஈரோடு, திருப்பூர் தாட்கோ தொழிற்பேட்டைகளில் தொழிற்கூடங்கள் அமைக்க விருப்பமா? விண்ணப்பிங்க!

ஈரோடு, திருப்பூர் தாட்கோ தொழிற்பேட்டைகளில் தொழிற்கூடங்கள் அமைக்க விருப்பமா? விண்ணப்பிங்க!

101 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஈங்கூர் தொழிற்பேட்டையில் 187 தொழிற்கூடங்கள் காலியாக உள்ளன; 13 தொழிற்கூடங்களும் மனைகளும் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களின் தொழில் வளர்ச்சிக்காக, ஈரோடு மாவட்டம் ஈங்கூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் தாட்கோ தொழிற்பேட்டைகளில் தொழிற்கூடங்கள் மாதாந்திர வாடகைக்கும், காலி மனைகள் 45 ஆண்டுக் குத்தகைக்கும் ஒதுக்கப்படுகின்றன. இதற்காக விண்ணப்பிக்குமாறு தாட்கோ மேலாண்மை இயக்குநர் செந்தில் ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

101 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஈங்கூர் தொழிற்பேட்டையில் 187 தொழிற்கூடங்கள் காலியாக உள்ளன; 13 தொழிற்கூடங்களும் மனைகளும் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள முதலிபாளையம் தொழிற்பேட்டையில் 33 தொழிற்கூடங்கள் காலியாக உள்ளன; 67 மனைகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்விரு தொழிற்பேட்டைகளிலும் மொத்தம் 220 தொழிற்கூடங்கள் வாடகைக்கு கிடைக்கின்றன.
முதற்கட்டமாக, ஈங்கூர் மற்றும் முதலிபாளையம் தொழிற்பேட்டைகளில் தலா 50,000 சதுர அடியில் நவீன ஆயத்தநிலை தொழிற்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தொழில் தொடங்க விரும்புவோர் கட்டுமானப் பணிகள் இன்றி உடனடியாக உற்பத்தியைத் தொடங்கலாம்.

இத்தொழிற்பேட்டைகளில் ரூ.50 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகளுடன் புனரமைப்புப் பணிகளும், ரூ.115 கோடி மதிப்பில் ஆயத்தநிலைத் தொழிற்கூடங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
ஈங்கூர் தொழிற்பேட்டையில் மின்சாரம், குடிநீர், சாலை வசதிகள் மற்றும் பொது வசதிகள் உள்ளன. முதலிபாளையம் தொழிற்பேட்டையில் மூன்று கட்ட மின்சாரம், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, திறமையான தொழிலாளர்கள் மற்றும் சோதனை ஆய்வகம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதனால் ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தித் தொழில்களுக்கு முதலிபாளையம் ஏற்றதாக உள்ளது.
18 முதல் 55 வயது வரை உள்ள பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். முதலிபாளையத்தில் ஆயத்தநிலைத் தொழிற்கூடம் பெற விரும்புவோர் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். ஈங்கூரில் பதிவு செய்யப்பட்ட வணிக நிறுவனம் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் தாட்கோ குழுவால் ஆய்வு செய்யப்பட்டு, நேர்காணல் மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் தாட்கோ இணையதளம் www.tahdco.com-ல் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 91502 77736, 73581 25780 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



முந்தைய செய்தி
திருச்சியில் 3,653 வீடுகள் இலக்கு: சூரிய மின்சக்தி தகடுகள் அமைக்க முனைப்பு
அடுத்த செய்தி
ரேஷனில் ரூ.35க்கு வெங்காயம் விற்பனை - புகார்களுக்கு வாட்ஸ்அப் எண் அறிமுகம்

தொடர்புடைய செய்திகள்